அவுஸ்திரேலியாவின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீபென்ஸ் (Paul Stephens) மற்றும் மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூஸுப்புக்கும் இடையிலான சினேகபூர்வமான சந்திப்பு இன்று (10) வியாழக்கிழமை ஸ்ரீ ஜயவர்தனபுர, பத்தரமுல்லவில் அமைந்துள்ள ஆளநர் செயலகத்தில் இடம்பெற்றது..!
இந்த சினேகபூர்வமான சந்திப்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மேல்மாகாண அபிருத்திக்கான முன்னோக்கிய சிந்தனை சம்பந்தமாக ஆளுநர் ஹனீப் யூஸுப் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகருக்கு விளக்கமளித்தார்.
மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களை கேந்திர நிலையங்களாக கொண்ட விஷேட வேலைத் திட்டங்களை ஆரம்பித்தல, முதலீட்டுத் திட்டங்களை விஸ்தரித்தல், புதிய தொழில் முயற்சிகளை ஆரம்பித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தனது இலக்காக உள்ளதாக கலந்துரையாடலின்போது ஆளுநர் தெரிவித்தார்.
முதலீட்டாளர்களின் நம்பிக்கையை விருத்தி செய்வதற்கான முக்கியமான அங்மாகவுள்ள பொருளாதாரத்தின் நம்பகத் தன்மையை முன்னெடுத்துச் செல்வதன் அவசியம் தொடர்பில் உயர் ஸ்தானிகர் கருத்துத் தெரிவிித்தார். சிறந்த திட்டங்களுக்கு அவுஸ்திரேலியாவின் ஒத்துழைப்பை முடிந்தளவில் பெற்றுத் தருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
(எம்,எஸ்.எம். முன்தஸிர்)
