உள்நாடு

விடுதி வசதியை பெற்றுக்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்..!

தெல்தோட்டை விஞ்ஞான செயற்திட்ட (DSP) மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை அதிகரிக்கும் நோக்கில் விடுதி வசதிக்கான ஏற்பாட்டை மஹ்பலுல் உலமா அரபுக்கலாசாலையுடன் இணைந்து எனசல்கொல்ல மத்திய கல்லூரி மேற்கொண்டுள்ளது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (9.9.24) அரபுக்கலாசாலையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் மஹ்பலுல் உலமா அரபு கலாசாலை சார்பாக அதன் பணிப்பாளர் அஷ்ஷேய்க். A.R. அப்துல் ரஸ்ஸாக் (நத்வி), செயலாளர் அஷ்ஷேய்க். M.S.M. நூருள்ளாஹ் (பாரி) மற்றும் முகாமையாளர் அஷ்ஷேய்க் ராஷித் (மஹ்பலி) ஆகியோரும் எனசல்கொல்ல மத்திய கல்லூரி சார்பாக அதன் அதிபர் ஜனாப் M.G. நயீமுல்லாஹ் மற்றும் உதவி அதிபர் ஜனாப் M.J.M. ஜெஸீம் அவர்களும் DSP சார்பாக சகோதர்ர் அப்துல்லாஹ்வும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *