ரவூப் ஹக்கீமின் கருத்து ஜனநாயகத்திற்கு விரோதமானதாகும்; முபாறக் அப்துல் மஜீத்
தேர்தலில் போட்டியிட்டவர்களைக் கொன்றொழித்த இடதுசாரி இயக்கம் புதிய முகமூடியுடன் இப்போது வந்துள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சொல்லியுள்ளது ஜனநாயக விரோத கருத்தாகும்.
ஒரு காலத்தில் பயங்கரவாதிகளாக இருந்தோர் அதனை கைவிட்டு ஜனநாயகத்துக்கு வந்தால் அதை ஏற்பதே ஜனநாயகமாகும்.
ரவூப் ஹக்கீம் கூடிக்குலாவி திரியும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சிகள் புனிதர்களாக இருந்தவர்களா? அவர்களும் வேட்பாளர்களையும், அப்பாவி மக்களையும் கொடூரமாக கொன்றொழித்தவர்கள் என்பது ரவூப் ஹக்கீமுக்கு மறந்து விட்டதா?
டெலோ, ஈபிஆர்எல்எப் போன்ற கட்சிகள் செய்த கொலைகள் கொஞ்ச நஞ்சமா? அவர்களுடன் ஹக்கீம் மஹப்பத்தாக புரியாணி சாப்பிட்டு உல்லாசமாக திரியவில்லையா?
முஸ்லிம் அரசியல்வாதிகள் நடு நிலையாக பேச வேண்டும். எமக்கு ஜேவிபியோ மற்றவர்களோ முக்கியம் அல்ல, ஆனால் உண்மைக்கு மாற்றமாக பேச முனைவது சமூகத்தை தர்மசங்கடத்துள் தள்ளும்.
முபாறக் அப்துல் மஜீத் முப்தி
ஸ்ரீலங்கா உலமா கட்சி.
