தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவானார் கல்பிட்டி அல் அக்ஸாவின் இக்மால் மொஹம்மட்
வடமேல் மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் 6.30 மீற்றர் தூரம் பாயந்து கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் மாணவன் எம்.இக்மால் மொஹமட் 3ஆம் இடத்தினைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகினார்.
பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வள்ளுநர் போட்டி நிகழ்ச்சிகள் கோட்டம், மாவட்டம் ஆகிய மட்டங்கள் நிறை பெற்ற தற்சமயம் மாகாண மட்டப் போட்டிகள் இடம்பெற்று வருகின்றன. அதற்கமைய இன்றைய தினம் (9) குருநாகல் வெலகெதர மைதானத்தில் இடம்பெற்ற 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டி இடம்பெற்றிருந்தது.
இப்போட்டி நிகழ்ச்சியில் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையைப் பிரதிநிதித்துவம் செய்து முஹம்மது இக்மால் மொஹம்மட் பங்கேற்றிருந்தார். இப்போட்டியில் 6.30 மீற்றர் தூரத்தினைப் பாய்ந்த இக்மால் முஹம்மட் 3ஆம் இடத்தினைப் பெற்று தேசிய மட்ட போட்டிக்குத் தகுதி பெற்றார்.
அத்துடன் தேசிய மட்டப் போட்டியிலும் வெற்றி பெற்று பாடசாலைக்கும் ஊருக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்ற வாழ்த்துக்களை தெரிவிக்கின்ற பாடசாலை சமூகம் இவரின் வெற்றிக்குத் துணைநின்ற அல் அக்ஸா தேசிய பாடசாலையின் அதிபர் மற்றும் பிரதி அதிபர்கள்இ விளையாட்டுத்துறை ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் இம்மாணவனின் பெற்றோர் ஆகியோருக்கு பாடசாலை சமூகம் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது.

(அரபாத் பஹர்தீன்)
(படஉதவி – ரியாஜ்- பாடசாலைப் பயிற்றுவிப்பாளர்)
