வெளிநாட்டு கடன்களை பெற்றுக் கொள்வதில் தேசிய மக்கள் சக்திக்கு தெளிவான கொள்கை..! -கலாநிதி பி.பி சிவப்பிரகாசம்.
தேசிய ஐக்கிய முன்னணி வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றுக் கொள்வதில் ஒரு தெளிவான திட்டத்தை வைத்துள்ளன. தேசிய மக்கள் சக்தி எப்படி வெளிநாட்டு உதவிகளைப் பெற்றுக் கொள்வார்கள் என்ற பொய்யான பிரச்சாரங்களை நம்ப வேண்டாம் என்று கண்டி மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் கலாநிதி பி. பி. சிவப்பிரகாசம் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றும் போது
வெளிநாட்டு உதவிகளை எப்படி தேசிய மக்கள் சக்தியினர் பெற்றுக் கொள்ள முடியும் என்று பலர் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். தேசிய மக்கள் சக்தியின் மீது மக்கள் நம்பிக்கை வைப்பதற்கான மிக முக்கியமான விடயமாக இந்த வெளிநாட்டு உதவிகள் பெற்றுக் கொள்ளுகின்ற விடயம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. இந்த நாடு மிகவும் மோசமான நிலைக்குப் பாதிக்கப்பட்டிருப்பது என்பது வெளிநாடுகளில் அதிகம் கடன் பெற்றமையினால் ஆகும். தேசிய மக்கள் கட்சி அதற்கான தெளிவான திட்டத்தை நாங்கள் வைத்திருக்கின்றோம். ஏனென்றால் இப்பொழுது கூறுவது மாதரி பொய்களுக்கு நீங்கள் அகப்பட வேண்டாம்.
இதில் மக்கள் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். சர்வதேச நாணய நிறுவனம் ஒரு தனி நபருக்கு கடன் நிதி உதவி வழங்குவது இல்லை. அது சர்வதேச ரீதியாக இயலாத காரியம். ஒரு நாடு இன்னுமொரு நாட்டுக்காகவும் கடன் நிதி உதவி வழங்கும். சர்வதேச நாயண நிறுவனம் நாடுகளுக்கே நிதி உதவி வழங்கும். ஆகவே இலங்கை நம்பித்தான் கடன் வழங்குகின்றார்களே ஒழிய ஆட்சி இருப்பவர்களை நம்பி கடன் வழங்க வில்லை. ஆக இது ஒரு பொய்யான கூற்று. மக்கள் இதை நம்பாதீர்கள். தேசிய மக்கள் சக்தியிடம் ஒரு சரியான திட்டம் இருக்கிறது. அந்த திட்டத்தின் அடிப்படையில் நிச்சயமாக வெளிநாட்டு உதவிகளைப் பெறுவோம். அதைப் பெற்றுக் கொள்வதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
எங்களுடைய தேசிய மக்கள் சக்தியிடம் நிதி சம்மந்தமான பொருளாதார விடயம் தொடர்பில் தேசிய ரீதியில் நிபுணத்துவம் பெற்றவர்கள் இருக்கின்றார்கள். இந்த நிபுணர்கள் சரியான திட்டத்தை வகுத்து இருக்கின்றார்கள். ஏற்கெனவே நாம் எடுத்த ஐ. எம். எப். கடனை எவ்வாறு குறுங்காலத்தில் மத்திய காலத்தில் நீண்ட காலத்தில் செலுத்துவது பற்றியும் அதற்கு எவ்வாறு விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளுதல் என்பது பற்றியும் நாங்கள் பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டு இருக்கின்றோம். அவற்றில் வெற்றி இருக்கின்றது என்று கூறலாம். நிச்சயமாக யப்பான், சீனா, இந்தியா, ஐரோப்பிய நாடுகள் போன்ற பல்வேறு நாடுகள் வெளிநாட்டு உதவிகளைத் செய்யத் தயாராக இருக்கின்றார்கள். அவர்கள் எதிர்பார்ப்பது நியாயமான அரசு. ஊழல் அற்ற அரசு. சிறந்த அரசு. நல்ல முறையில் செய்யக் கூடிய அரசு. அந்த நல்ல அரசு யார் என்றால் தோழர் அனுர குமார அவர்களுடைய ஆட்சியே தான்.
அந்த ஆட்சி உங்களுக்கு நிச்சயமாக நன்மையைத் தரும்.. மக்களாகிய நீங்கள் எதற்கும் அஞ்ச வேண்டிய அவசியமில்லை நாங்கள் நல்லதொரு மக்கள் ஆட்சி செய்யக் கூடிய அரசைக் கொண்டு வருவோம். மக்களுக்கு நீதி நியாயமான, ஜனநாயகப் பொருளாதாரத்தைக் கொண்டு வருவோம். நிச்சயம் உங்களுக்கு வெற்றியைக் கொண்டு வரும் என்பதில் எந்த விதமான கருத்து வேறுபாடுகளும் இல்லை என்று நான் நம்புகின்றேன்.
(இக்பால் அலி)
