விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; இலங்கைக் குழாம் அறிவிப்பு

இங்கிலாந்து அணிக்கு எதிரான இம்மாதம் ஆரம்பமாகவுள்ள 03 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட தனஞ்சய டி சில்வா தலைமையிலான இலங்கை குழாம் நேற்று (07) இலங்கை கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டது.

இவ் அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. மேலும் இலங்கை அணி இம்மாதம் நடுப்பகுதியில் இங்கிலாந்து நோக்கிப் பயணிக்கவுள்ளது. அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றது.

அதற்கமைய முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகி 25ஆம் திகதி நிறைவடையும். 2ஆவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர் 02ஆம் திகதி வரை இடம்பெறும் என்பதுடன், 3ஆவது போட்டி செம்டெம்பர் 6முதல் 10ஆம் திகதி வரை நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் இத் தொடருக்கான பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்துக் குழாம் கடந்த இரு தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அந்தவகையில் நேற்றைய தினம் இலங்கைக் குழாம் இலங்கை கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்ற வீரர்களே அதிகமாக இடம்பெற்றுள்ளனர்.

அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாத்தினை சகலதுறை வீரரான தனஞ்சய டி சில்வா வழிநடாத்துகின்றார். அவருடன் துடுப்பாட்ட வீரர்களாக முன்னாள் அணித்தலைவரான திமுத் கருணாரத்ன,நிஷான் மதுஷ்க, பெத்தும் நிஷங்க ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர். மேலும் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர்களான குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால் மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

மேலும் சகலதுறை வீரர்களாக அஞ்சலோ மெத்யூஸ், கமிந்து மெண்டிஸ் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். பந்துவீச்சு வரிசையைப் பொறுத்தவரையில் வேகப்பந்துவீச்சாளர்களாக அசித பெர்னாண்டோ,விஷ்வா பெர்னாண்டோ, கசுன் ராஜித, லஹிரு குமார ஆகியோருடன் மித வேகப்பந்து சகலதுறை வீரரான நிசல தாரக அறிமுக வீரரான இணைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் சுழல்பந்துவீச்சாளர்களாக பிரபாத் ஜெயசூரிய, ரமேஷ் மெண்டிஸ் மற்றும் ஜெப்ரி வெண்டர்சே ஆகியோருடன் இளம் வீரரான மிலான் ரத்நாயக்கவும் இலங்கை டெஸ்ட் குழாத்தில் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்துக்கு எதிரான இலங்கைக் குழாம்

1) தனஞ்சய டி சில்வா – தலைவர்
2) திமுத் கருணாரத்ன
3) நிஷான் மதுஷ்க
4) பெத்தும் நிஸ்ஸங்க
5) குசல் மெண்டிஸ் – உப தலைவர்
6) அஞ்சலோ மெத்தியூஸ்
7) தினேஷ் சந்திமால்
8) கமிந்து மெண்டிஸ்
9) சதீர சமரவிக்ரம
10) அசித பெர்னாண்டோ
11) விஷ்வா பெர்னாண்டோ
12) கசுன் ராஜித
13) லஹிரு குமார
14) நிசல தாரக
15) பிரபாத் ஜயசூர்ய
16) ரமேஷ் மெண்டிஸ்
17) ஜெஃப்ரி வெண்டர்சே
18) மிலான் ரத்நாயக்க

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *