உள்நாடு

சஹ்மி ஷஹீத்துக்கு ரூமி ஹாசிம் வாழ்த்து…!

இலங்கை நாட்டைச் சுற்றி , சமாதான நடைபவனி மேற்கொள்ளும் நோக்குடன் கடந்த ஜூலை 13 ஆம் திகதி முதல் நடைப்பவணியில் ஈடுபட்டுவரும் சஹ்மி ஷஹீத் அவர்களுக்கு,இலங்கை மருந்தாகக்க கூட்டுத் தாபணத்தின் முன்னாள் தலைவரும்,ரூமி ஹாஷிம் பவுண்டேசன் ஸ்தாபகருமான கலாநிதி அல்ஹாஜ் ரூமி ஹாஷிம் அவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்த்துச் செய்தியில், “வரலாற்றுச் சிறப்புமிக்க பேருவளை மண்ணின் சமாதானப் புறாவாக,எழில்மிகு இலங்கையைச் சுற்றிவரும் சஹ்மி சஹீத், தடைகளைத்தாண்டி, தேக ஆரோக்கியத்தோடு, உற்சாகத்தோடு, தன்னுடைய பயண இலக்கை அடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் வேண்டிக்கொள்கிறேன்” என்று கூறினார்.

சஹ்மி ஷஹீத் இன்று (08) தனது 27 ஆவது நாள் பயணத்தை, வடமாகாணத்தின் பறந்தனில் இருந்து தலையாடி நோக்கி பயணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

(பேருவளை : பீ.எம் முக்தார் )

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *