உலக முஆய் தாய் சம்பியன்ஷிப் தொடரில் கஹட்டோவிட்டவின் மூன்று வீரர்கள்..!
உலக முஅய் தாய் (ifma youth) சம்பியன்ஷிப் போட்டிகள் செப்டம்பர் 12 ஆம் திகதி தாய்லாந்தில் ஆரம்பமாக உள்ளது. இப் போட்டித் தொடரில் இலங்கையிலிருந்து 30 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.இவர்களுள் கஹட்டோவிட்ட கிராமத்தைச் சேர்ந்த மூவர் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஸுமர் தில்ஷாத்,பதாஹ் நூர் முஹம்மத்,அஷ்மல் அஷ்ரப் அலி ஆகிய மூன்று வீரர்களே இவர்களாவர். கஹட்டோவிட்டவைப் பிறப்பிடமாகக் கொண்ட இம் மூன்று வீரர்களும் கடந்த காலங்களில் நடைபெற்ற தேசிய மட்டத்தில் நடைபெற்ற போட்டிகளில் பதங்கங்களை வென்றிருந்தனர்.இந்த வாரம் இடம்பெற்ற தகுதிகாண் போட்டிகளில் இம் மூவரும் உலக சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர். அமெரிக்க, ஐரோப்பிய,ஆசியப் பிராந்தியங்களைச் சேர்ந்த 120 நாடுகளின் போட்டியாளர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர். கஹட்டோவிட்டவில் இவர்களுக்கான பயிற்சிகளை பயிற்சியாளர் முஆத் வழங்கி வருகிறார்.
