உள்நாடு

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பற் சிகிச்சை முகாம் இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில்

கல்முனை கல்வி வலய கல்முனை கமு/கமு/ இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களின் பற் சுகாதாரத்தைப் பேணும் நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஸஹீலா இஸ்ஸதீன் அவர்களின் வழிகாட்டலில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்ட பல் சிகிச்சை முகாம் இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

கல்முனை கமு/கமு/ இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் ஏ.ஜி.எம்.றிசாத் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ. ஆர். எம்.அஸ்மி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இப்பற் சுகாதார முகாமில், பற் சுகாதார நிபுணர் டாக்டர் திருமதி. எம். ஆர்.எஃப். சுர்பா, பற் சுகாதார அதிகாரி டாக்டர் திருமதி பரிஹா, ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களின் பற் சுகாதார சிகிச்சைகளை மேற்கொண்டனர்.

இந்நிகழ்வில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஏ.எம் பாரூக். பொதுச்சுகாதார பரிசோதகர் ஏ.எம். ஜுனைட் ஆகியோர் இணைந்து மாணவர்களின் பற் சுகாதாரம் தொடர்பான பரிசோதனைகளிலும், விழிப்புணர்வுச் செயற்பாடுகளிலும் ஈடுபட்டனர்.

(நூருல் ஹுதா உமர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *