உள்நாடு

மனாகிப் ஷாதுவி தமாம் இன்று கஹட்டோவிட்ட மஸ்ஜிதுன் நூரில்..!

கஹட்டோவிட்ட மின்ஹதுல் இப்றாஹிமிய்யா ஸாவியாவில் இடம்பெற்று வரும் மனாகிபுஷ் ஷாதுலி தமாம் வைபவம் இன்று மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.

97 ஆவது வருமாகவும் நடைபெற்று வரும் அல் குத்புல் அக்பர் வல் கௌஸுல் அஷ்ஹர் அல் இமாம் அஸ்ஸெய்யித் அஷ்ஷெய்க் அபுல் ஹஸன் அலிய்யுஷ்ஷாதுலி ரஹ்மதுள்ளாஹி அலைஹி அவர்களின் ஞாபகார்த்தமாக நடைபெற்று வரும் மனாகிப் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை பின்னேரம் ம ஃரிப் தொழுகையை தொடர்ந்து கஹட்டோவிட்ட மின்ஹதுல் இப்றாஹிமிய்யா ஸாவியாவில் ஆரம்பமானது.

இந்த மனாகிபுஷ்ஷாதுலி நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வு ஸாவியாவில் இடம்பெறவுள்ளதுடன் ,
குறித்த மனாகிபுஷ்ஷாதுலி தமாம் நிகழ்வு இன்றைய தினம் காலை 10 மணி முதல் கஹட்டோவிட்ட மஸ்ஜிதுன் நூர் ஜும்மா பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.

மேற்படி மஜ்லிஸில் மௌலித்,ஹாழரா,பயான் நிகழ்வு போன்றன இடம்பெற உள்ளத்தோடு நாளைய தமாம் நிகழ்வின் விசேட பயானைக கலீபதுஷ்ஷாதுலி அல் ஹாஜ் அஷ்ஷெய்கு ஏ.எச்.இஹ்ஸானுத்தீன் நளீமி அவர்கள் நிகழ்த்த இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *