விளையாட்டு

சிலிங்கா பாணியில் பந்துவீசி மாலிங்கவை ஈர்த்துள்ள பைனாஸ்

உலகை திரும்பி பார்க்க வைத்துள்ள இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வேகப்பந்து வீச்சாளருமான லசித் மாலிங்கவினால் பாரட்டப்பட்டுள்ள சிலிங்கா என அழைக்கப்படும் பந்துவீச்சு பாணியினைக் கொண்ட சிறுவன் பைனாஸ் இன்று இலங்கை கிரிக்கெட் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகின்றார்.

அனுராதபுர மாவட்டத்தில் ஹொரவ்பொத்தான பிரதேசத்தில் பத்தாவை அல் ஹமாஸ் கிரிக்கெட் கழகத்தில் ஹொரவ்பொத்தான கிரிக்கட் வாரியத்தியில் பதிவு செய்யப்பட்ட நிக்கவெவ கிரிக்கட் கழகத்தில் மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட மென் பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில் விளையாடி, சம்பியன் கிண்ணத்தை பெற்றுக்கொண்ட அல் ஹமாஸ் கழகத்தில் விளையாடிய இச்சிறுவன் தான் பைனாஸ்.

அதுமட்டுமல்லாமல் நமது நாட்டு முன்னாள் கிரிக்கட் வீரர் லசித் மாலிங்கவின் பணியில் பந்தை வீசி லசித் மாலிங்கவினால் அவரது முகநூல் பக்கத்தில் பைனாஸ் பந்துவீசும் காணொளியை பதிவேற்றி இச் சிறுவன் தொடர்பான தகவல்களைக் கோரியிருந்தார். இதனால் சிறுவன் பைனாஸ் சமூக வலைத்தளத்தில் புகழ் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *