பாராளுமன்ற உறுப்பினராகிறார் வீரசேன கமகே
காலஞ்சென்ற அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நந்தசேனவின் வெற்றிடத்துக்கு பட்டியலில் அடுத்ததாக உள்ள வீரசேன கமகே நியமிக்கப்படவுள்ளார்.
வட மத்திய மாகாண சபையை நீண்ட காலம் பிரதிநிதித்துவப்படுத்திய இவர் மாகாண கைத்தொழில் அமைச்சராகவும் 7 தடவைகள் பதில் முதலமைச்சராகவும் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
