துந்துவை மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழா..!
34 வருட காலமாக துந்துவை கிராமத்தில் குடும்ப பொது சுகாதார தாதியாக பணியாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற விதானகே புன்சி நோநா மற்றும் துந்துவை கிராமத்தில் பிறந்து வளர்ந்து முஸ்லிம் மக்களுடன் அந்நியோனமாக பழகும் அவரது மகன் பிரதீப் மாபலகம இலங்கை இராணுவத்தில் பிரகேடியர் பதவிக்கு உயர்வடைந்ததை பாராட்டி துந்துவை மக்களால் ஏற்பாடு செய்யப் பட்ட பாராட்டு விழா கடந்த 18.02.2024 துந்துவை ஜும்மா பள்ளி முற்ற வெளியில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பள்ளிவாசல் நிர்வாகிகள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், அரசியல் தலைவர்கள், ஊர் பிரமுகர்கள், நலன்விரும்பிகள் கலந்து கொண்டனர்.
(பேருவளை பீ எம் முக்தார்)