கொழும்பில் நடைபெற்ற ரஹ்மத் பதப்பகத்தின் நூல் வெளியீட்டு நிகழ்வு..!
தமிழ்நாடு ரஹ்மத் பதிப்பகத்தின் ஸிஹாஹ் ஸித்தா ஹதீஸ் கிரந்தங்களின் மிஷ்காதுல் மஸாபிஹ் தமிழ் மொழி பெயர்ப்பு தொகுதி அறிமுகமும் நூல் வெளியீட்டு விழா கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் தமிழ் பிரிவுடன் இணைந்து தமிழ்நாடு ரஹ்மத் பதிப்பகம் கடந்த வெள்ளிக்கிழமை (01) கொழம்பு ஸாஹிராக் கல்லூரியின் அப்துல் கபூர் மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் ரிஷ்வி மரிக்கார் தலைமையில் இடம்பெற்றது.
பிரதம அதிதியாக பேருவளை ஜாமிய நளீமியா இஸ்லாமிய நிறுவனத்தின் முதல்வர் அஷ் ஷெய்ஹ் ஏ.சி. அஹார் முஹம்மது உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பpத்தனர்.
இதன்போது இதன்போது விசேட உரையை பிரதம அதிதி வழங்கினார் , சிறப்புரைகளை சென்னை மந்தைவெளி ஈத்கா மஸ்ஜிதின் தலைமை இமாம் மௌலானா கே.எம்.இல்யாஸ் ரியாஜி, புதுப்பேட்டை மஸ்ஜிதே மஹ்மூத் பள்ளியின் தலைமை இமாம் ஹாபிழ் ஏ.பீர்முகம்மது பாகவி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவருமான எம்.தமீமுன் அன்சாரி, அகில இலங்கை ஜமிய்யதுல் உலமாவின் முன்னாள் விரிவுரையாளரும் மலேசியாவின் சயின்ஸ் இஸ்லாம் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளருமான கலாநிதி ஏ.ஏ.ஏ.அஸ்வர் (அஸ்ஹரி) ஆகியோர் சிறப்புரைகளை வழங்கினர்.
இதன்போது பாடசாலையின் தமிழ் பிரிவு வளர்ச்சிக்காக ரஹ்மத் பதிப்பகத்தினால் இரண்டு இலட்சம் ரூபா காசோலையும் அன்பளிப்புச் செய்யப்பட்டது. அத்துடன் நூலின் ஒரு தொகுதியையும் கல்லூரிக்கு அன்பளிப்பு செய்யப்பட்டதுடன் நூலின் பிரதிகளை வருகை தந்த முக்கிய பிரமுகர்களுக்கும் வழங்கப்பட்டதுடன் அதிதிகள் பொன்னாடை போர்த்தியும் நினைவுச்சின்னங்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.
(ஏ.எஸ்.எம்.ஜாவித் – கொழும்பு)