Sunday, March 22, 2026
Latest:
உள்நாடு

பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு

பாராளுமன்ற அமர்வுகள் இன்று (23) காலை ஆரம்பமான நிலையில் அவற்றை இடைநிறுத்துவதற்கு சபாநாயகர் தீர்மானித்தார்.

எதிர்க்கட்சிகளின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இன்று நடைபெறவிருந்த இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடைநிறுத்தப்பட்டு விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தப்படும் என சபாநாயகர் அறிவித்தார்.

இதே வேளை இன்று காலையிலும் கட்சி தலைவர் கூட்டம் ஒன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *