விளையாட்டு

இந்தியாவில் இடம்பெற்ற Madras Super Cup Season 4-2026 இன் சம்பியனான கொழும்பு ரினவுன்; சிறந்த கோல் காப்பாளர் விருது கஹட்டோவிட்ட ராஷித் ரிஸ்மி வசம்

இந்தியாவின் தமிழ்நாடு, மகாபலிபுரதத்தில் இடம்பெற்ற Madras Super Cup Season 4 – 2026 Futsal இன் 18 வயதின் கீழ் ஆண்கள் பிரிவின் இறுதிப்போட்டியில் கொழும்பு Renown விளையாட்டுக் கழகம் நடப்பு சம்பியனான XIFT கழகத்தை 7: 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளது.

இத்தொடரில் கொழும்பு Renown அணியின் கோல் காப்பாளர் ராஷித் ரிஸ்மி சிறந்த கோல் காப்பாளருக்கான Golden Glove விருதை வென்றுள்ளார்.

கம்பஹா மாவட்டம், கஹட்டோவிட்ட கிராமத்தை சேர்ந்த ராஷித் ரிஸ்மி கஹட்டோவிட்ட JF விளையாட்டுக் கழகத்தின் உறுப்பினருமாவார். அவருக்கே JF விளையாட்டுக் கழகத்தினர், கல் எளிய Society உட்பட பலரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *