உள்நாடு

ஜுமாதல் ஆகிரஹ் மாதம் இன்றிரவு ஆரம்பம்

இஸ்லாமிய புதுவருடமான ஜுமாதல் ஆகிரஹ் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு நேற்று செவ்வாய்க்கிழமை 10ஆம் திகதி மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது .

பிறைக் குழுத் தலைவர் மெளலவி ஹிஷாம் அல் பத்தாஹி தலைமையில் இந்த நிகழ்வு இடம் பெற்றுள்ளது.
இதன்போது நாட்டின் எப்பாகத்திலும் தலைப் பிறை தென்பட்டதற்கான உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் கிடைக்காத காரணத்தால் புனித
ஜூமாதுல் ஊலா
மாதத்தை இன்று 11 புதன்கிழமை 30 ஆக பூர்த்தி செய்து இன்று மாலை மஹ்ரிப் ‌ தொழுகையுடன் புனித ஜுமாதல் ஆகிரஹ் மாதம் ஆரம்பமாவதாக பிறைக்குழுத் தலைவர் அறிவித்தார்.

கொழும்பு பெரிய பள்ளிவாசலின் தலைவர் தாஹிர் ரஸீன் உள்ளிட்ட நிருவாக சபை உறுப்பினர்களின் ஏற்பாட்டில் இடம் பெற்ற நிகழ்வில் பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபை உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், வளிமண்டல திணைக்கள அதிகாரிகள், ஏனைய பள்ளிவாசல்கள், ஸாவியாக்கள், தரீக்காக்களின் பிரதிநிதிகள் மேமன் சங்க பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *