கன மழையால் கொழும்பின் பல வீதிகள் நீரில் மூழ்கியது
கொழும்பில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, மாளிகாவத்தை, சங்கராஜ மாவத்தை மற்றும் கெத்தாராம மைதானத்தை அண்மித்த பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அத்துடன், ஆமர் வீதி, நவம் மாவத்தை மற்றும் பொரளை பகுதிகளைச் சூழவுள்ள பல வீதிகளிலும் போக்குவரத்துத் தடைகள் ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
