விளையாட்டு

உலக மேமன் அமைப்பின் உலகளாவிய இளைஞர் பிரிவு ஏற்பாட்டில் பூப்பந்தாட்டப் போட்டி

உலக மேமன் அமைப்பின் உலகளாவிய இளைஞர் பிரிவினால், 2026 ஆம் ஆண்டுக்கான மேமன் பூப்பந்தாட்டப் போட்டி, Pyramid Wilmar & Phone Company நிறுவனத்தின் இணை அனுசரணையுடன் கடந்த 25ஆம் திகதி மாலை கொழும்பு 10, டி.பி. ஜாயா மாவத்தையில் அமைந்துள்ள புனித ஜோசப் கல்லூரியின் பூப்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட Pyramid Wilmar & Phone Company நிறுவனத்தின் பணிப்பாளர் ஹாஷிம் உமர் அவர்கள், 40 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் வெற்றிபெற்று சம்பியன் பட்டம் பெற்ற வீரர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களையும் பணப்பரிசில்களையும் வழங்கி கௌரவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *