அனைத்துக் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் அனோஜன் விடுதலை
மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் கருணை அடிப்படையில் விடுவிக்கப்பட்ட அனோஜன் சிவராசா அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சவூதி அரேபிய நீதிமன்றத்தினால் அனோஜன் சிவராசா மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் நீக்கப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவரை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
