கொழும்பிற்கு ஒரு பாராளுமன்ற ஆசனம் அதிகரிப்பு; பதுளைக்கு ஒன்று குறைப்பு
2026ஆம் ஆண்டுக்கான பிரதான வாக்காளர் பதிவேட்டின் அடிப்படையில், கொழும்பு தேர்தல் மாவட்டத்திற்கான பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 18 இலிருந்து 19 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பதுளை தேர்தல் மாவட்டத்திற்கான பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 9 இலிருந்து 8 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான பிரதான வாக்காளர் பதிவேட்டில் நாடளாவிய ரீதியில் மொத்தம் 1 கோடியே 75 இலட்சத்து 34 ஆயிரத்து 397 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
