அம்பாறை மாவட்டத்தில் 330 பேருக்கு NVQ சான்றிதழ்கள் வழங்கி வைப்பு
சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில்
அம்பாறை மாவட்டத்தில் உள்ள 30 க்கும் மேற்பட்ட தொழிற்பயிற்சி அதிகார சபையின் பயிற்சி நிலையங்களில் 16க்கும் மேற்பட்ட பல்வேறு தொழில்நுட்ப பயிற்சி துறைகளில் கற்கை நெறிகளும் பூர்த்தி செய்த 330 பேருக்கு NVQ தொழில் தகைமை சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு 2026.10.27 சாய்ந்தமருதில் உள்ள லி மேரிடேரியன் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
தொழிற்பயிற்சி அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.பீ .எம். நளீம் தலைமையில், இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உயர்கல்வி தொழில்நுட்ப கல்வி அமைச்சின் கீழ் உள்ள இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் தலைவர் விஜித வீரதுங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு, பயிற்சிகளை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்தவர்கள் NVQ சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
மேலும், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அனுபம மங்கள விக்ரமாராச்சி, தொழிற்பயிற்சி அதிகார சபையின் தொழில் வழிகாட்டல் ஆலோசனை பணிப்பாளர் சந்தன விதான பத்திரன, திட்டமிடல் மற்றும் தொழில் ஆராய்ச்சி பணிப்பாளர் ஏ. முகம்மட் ஜாபிர், பரீட்சைகளுக்கான பொறுப்பான பணிப்பாளர் கனகசுந்தரம் சாய்ந்தமருது பிரதேச செயலாளர், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்
உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அத்துடன், தொழிற்பயிற்சி அதிகார சபையின் அதிகாரிகள், விரிவுரையாளர்கள், பயிற்சிகளைப் பூர்த்தி செய்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.
தொழில்சார் திறன்களை மேம்படுத்தும், தொழில் வாய்ப்புகளைப் மூவினங்களையும் சார்ந்த தெஹியத்தகண்டிய தொட்டு நிந்தவூர், காரைதீவு.கல்முனை சம்மாந்துறை, அக்கரைப்பற்று பொத்துவில், திருக்கோயில், அம்பாறை மற்றும் உகனை போன்ற பிரதேசத்தில் பாடசாலையை விட்டு விலகிய இளைஞர் யுவதிகள் இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் பயிற்சி நிலையங்களில் பயிற்சி நெறிகள் வெற்றிகரமாக பூாத்தி செய்து தமது அரச தொழிற் தகைமை சான்றிதழ்களை உறுதிப்படுத்தும் வகையில் NVQ சான்றிதழ்கள் முக்கியத்துவம் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.











(அஷ்ரப் ஏ சமத்)
