சீரற்ற வானிலையால் நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை
நிலவும் சீரற்ற வானிலைக் காரணமாக நாடாளாவிய ரீதியில் நாளை மாத்திரம் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் அழகியல் பாடத்துக்கான செயன்முறைப் பரீட்சை ஏற்கனவே திட்டமிட்டவாறு நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
