சம்மாந்துறையில் “எழுத்தின் இரு முகங்கள்” நூல் வெளியீட்டு விழா
அம்பாறை மாவட்ட ராபிததுன் நளீமிய்யீன் அமைப்பின் உறுப்பினரும் எழுத்தாளருமான நௌபாஸ் ஜலால்தீன் எழுதிய ‘எழுத்தின் இரு முகங்கள்’ நூல் வெளியீட்டு விழா நேற்று (25) ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறையில் நடைபெற்றது.
அமைப்பின் அம்பாறை பிராந்தியத் தலைவரும், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை செயலாளர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். இஸ்ஹாக் (நளீமி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடப் பேராசிரியர் அஷ்ஷெய்க் கலாநிதி எஸ்.எம்.எம். மஸாஹிர் (நளீமி) கலந்துகொண்டார்.
நூலின் மதிப்புரையை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை விரிவுரையாளர் அஷ்ஷெய்க் கலாநிதி எம்.ஐ.எம். அஸ்லம் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் அமைப்பின் அங்கத்தவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.







(தில்சாத் பர்வீஸ்)
