சீனன்கோட்டை பாரிஹா ஃபாரூக் இம்தியாஸ் எழுதிய “தாய்” கவிதை நூல் வெளியீட்டு விழா சிறப்பாக இடம்பெற்றது
பேருவலை பிராந்திய எழுத்தாளர் ஒன்றியத்தின் உறுப்பினரும், ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகரும், எழுத்தாளரும், கவிஞருமான சீனன்கோட்டையைச் சேர்ந்த பாரிஹா ஃபாரூக் இம்தியாஸ் எழுதிய தாய் கவிதை நூல் வெளியீட்டு விழா பேருவளை சீனங்கோட்டை நழீம் ஹாஜியார் மகளிர் கல்லூரி மர்ஹூம் தேசமான்ய பாக்கிர் மாக்கார் மண்டபத்தில் மிகவும் விமர்சையாக நடைபெற்றது.
மேற்படி பாடசாலையின் பிரதி அதிபர் ரிஸ்னா ராயிஸ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பேருவளை நகர பிதா மபாஸிம் அஸாஹிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மேல் மாகாண முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.பீ.எம். அலவி, முன்னாள் காதி நீதிபதி அல்ஹாஜ் மிர்ஸூக் பளீல், தர்கா நகர் இஸ்லாமிய நலன்புரிச் சங்க தலைவர் அல்ஹாஜ் ஏ.பீ.எம். சுஹைர், ஓய்வுபெற்ற இலங்கை வங்கி இந்தியா கிளை முகாமையாளர் கவிஞர் தர்காநகர் ஸபா, பேருவளை பீ.ஆர் மண்டப உரிமையாளரும் பிரபல சமூக சேவையாளருமான முகம்மத் ரிஸ்வான், ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
பேருவளை பெலஸ்பாத் சாதுலிய்யா ஸாவியாவின் தர்மகர்த்தாவும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான அல்ஹாஜ் இக்பால் சம்சுதீன், பேருவலை பிராந்திய எழுத்தாளர் ஒன்றியத்தின் செயலாளர் பஸ்லி ஹமீட், உப தலைவர் நப்ஹான் சிஹாப்தீன், முஸ்லிம் சமய கலாசார திணைக்கள முகாமைத்துவ உதவியாளர் அஸ்செய்க் முப்தி முர்ஸி (நளீமி) உட்பட எழுத்தாளர்கள், கவிஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
”தாய்” கவிதை நூலை வெ ளி யிட்ட பாரிஹா ஃபாரூக் இம்தியாஸ் அவர்களின் இலக்கிய பணிகளை இங்கு உறையாற்றிய பலரும் பாராட்டிப் பேசினர்.









(பேருவளை பீ.எம். முக்தார்)
