ஆளுனரின் உத்தரவில் பாத்தஹேவாஹெட்ட பிரதேச சபையின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்
மத்திய மாகாணத்திற்குட்பட்ட பாத்தஹேவாஹெட்ட பிரதேச சபையின் அனைத்து நிர்வாகச் செயற்பாடுகளும் நேற்று (19) முதல் உடனடியாகச் நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியின்கீழ் இயங்கிவந்த இந்தச் சபையின் நடவடிக்கைகள் தொடர்பில் மத்திய மாகாண ஆளுநர் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
பிரதேச சபையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் பல்வேறு நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, விசாரணைகள் நடுநிலையாக நடைபெறுவதை உறுதிசெய்யும் பொருட்டே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண ஆளுநர் அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது.
