இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜரானார் சாமர சம்பத்
இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) இன்று (12) காலை பாராளுமன்ற உறுப்பினர் சமர சம்பத் ஆஜராகியுள்ளார்.
இலஞ்சம் தொடர்பான சம்பவமொன்று குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக வாக்குமூலம் அளிக்குமாறு ஆணைக்குழு விடுத்த அழைப்பிற்கிணங்க, முன்னாள் அமைச்சரான அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
