உள்நாடு

ஊடகவியலாளர்களுக்கான அனர்த்தத் தயார்நிலை செயலமர்வு

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் ஏற்பாட்டில், ஊடகவியலாளர்களுக்கான அனர்த்தத் தின் போது தயார்நிலை, மீள்திறன் மற்றும் பொறுப்பான ஊடக அறிக்கையிடல் தொடர்பான மூன்றாவது செயலமர்வு குருநாகல் பொத்துஹரவில் நடைபெற்றது.

குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்காக இடம்பெற்ற இச்செயலமர்வில், அனர்த்த முன்னெச்சரிக்கை, மண்சரிவு அபாயம், காலநிலை மாற்றம், ஊடக அறிக்கையிடல் மற்றும் ஊடகச் சட்டங்கள் தொடர்பில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

செயலமர்வில் பங்கேற்ற ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

(ஏ.என்.எம். முஸ்பிக்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *