உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

இன்று முதல் நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் அதிக மின்னல் தாக்கம் இருக்குமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டின் அநேகமான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை பெய்யும் சாத்தியமுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *