சாதனை மாணவன் தனோஜ் தீக்ஷனவுக்கு அங்கமுகம அல் அக்ஸா பள்ளியில் கெளரவம்.

தனோஜ் தீக்ஷண சிறுவயதிலேயே தனது தாயை இழந்த நிலையில், தனது தந்தையின் அன்பு, அரவணைப்பு மற்றும் வழிகாட்டலின் கீழ் 2026ஆம் ஆண்டு, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் இலங்கை அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்த எஹெட்டுவெவ ஆரம்பப் பாடசாலை மாணவன் தனோஜ் தீக்ஷணவை கௌரவிக்கும் நிகழ்வு, கல்கமுவ அங்கமுகம அல்-அக்ஸா ஜும்ஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.
அல்-அக்ஸா ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாக சபைத் தலைவர் S.L.M. அன்வர் தலைமையில் நடைபெற்ற இக்கௌரவிப்பு நிகழ்வு, ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றது. நிகழ்வை முன்னிட்டு அஸான் ஒலிப்பதற்கு முன்னர் வாகனப் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு, மாணவன் தனோஜ் தீக்ஷணவை கல்கமுவ அங்கமுகம பிரதேசத்தைச் சுற்றி அழைத்துச் சென்று அல்-அக்ஸா ஜும்ஆ மஸ்ஜிதிற்கு அழைத்து வரப்பட்டார்.
இந்நிகழ்வுடன் இணைந்ததாக, கல்கமுவ அங்கமுகம அல்-அக்ஸா ஜும்ஆ மஸ்ஜிதில் சிங்கள மொழியில் ஜும்ஆ குத்பா நடைபெற்றது.
