Thursday, September 24, 2026
உள்நாடு

வேலைக்குச் சென்ற 4 பிள்ளைகளின் தந்தை எங்கே? சம்மாந்துறையில் காணாமல் போன நபரைத் தேடும் குடும்பத்தினர்

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நான்கு பிள்ளைகளின் தந்தையான அமீர் அலி பாரிஸ் என்பவர் கடந்த சில மாதங்களாக காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

வேலைக்குச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படும் குறித்த நபர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவலும் கிடைக்காத நிலையில், குடும்பத்தினர் அவரைத் தேடி வருகின்றனர்.

காணாமல் போன அமீர் அலி பாரிஸ் தொடர்பில் தகவல்கள் ஏதேனும் தெரிந்தவர்கள் அல்லது அவரை எங்காவது கண்டவர்கள், சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தை +94 67 226 0222 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தொடர்புகொண்டு தகவல் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

தில்சாத் பர்வீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *