உள்நாடு

பிறை தென்பட்டது.ரபியுனில் ஆகிர் மாதம் ஆரம்பம்.

ஹிஜ்ரி 1448 ரபியுனில் ஆகிர் இஸ்லாமிய மாதத்திற்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நேற்று செப்டம்பர் 12 ஆம் திகதி சனிக்கிழமை மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் பள்ளி வாசலின் தலைவர் தாஹிர் ரஸீன் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது நாட்டின் பல பாகங்களிலும் தலைப் பிறை தென்பட்டதற்கான ஆதாரபூர்வமாக ஊர்ஜீதம் செய்யப்பட்ட தகவல்கள் கிடைத்தமைக்கு அமைவாக பிறைக் குழுத் தலைவர் ஹிஸாம் அல் பத்தாஹி இலங்கை வாழ் மக்களுக்கு தலைப் பிறை தென்பட்டதை உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.

அதன் படி நேற்று (12) மாலையுடன் றபியுனில் ஆகிர் மாதம் ஆரம்பமாகியது.

மேற்படி பிறை பார்க்கும் மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு உறுப்பினர்கள் , அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையின் பிரதிநிதி மெளலவி ரிழா உள்ளிட்ட உறுப்பினர்கள் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் அஹமட் அப்ரோஸ் உள்ளிட்ட அதிகாரிகள், வளிமண்டல திணைக்கள அதிகாரி மொஹமட் சாலிஹீன், ஏனைய பள்ளிவாசல்கள், ஸாவியாக்கள், தரீக்காக்களின் பிரதிநிதிகள் மற்றும் மேமன் சங்க பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்


ஏ.எஸ்.எம்.ஜாவித்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *