மிக் விமான கொள்வனவு.FCID க்கு இன்று வருமாறு கோட்டாவுக்கு அழைப்பு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மிக் (MiG) விமானங்களை கொள்வனவு செய்த கொடுக்கல்வாங்கல் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக, இன்று (11) நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, முன்னாள் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க, குறித்த கொடுக்கல்வாங்கல் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்று (10) காலை FCID-க்கு சென்றிருந்தார்.
ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் வழங்கிய பின்னர், அவர் FCID வளாகத்திலிருந்து வௌியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
