கால்வாயில் கவிழ்ந்த பேரூந்து.20 பேர் காயம்.
பொலன்னறுவை – ஹபரணை பிரதான வீதியின் 7ஆவது கிலோமீற்றர் பகுதியில் பேருந்தொன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸாரால் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
