உள்நாடு

இலங்கை பெண்கள் தலைமைத்துவம் மற்றும் வலுவூட்டலை முன்னிறுத்திய ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் மகளிர் மாநாடு

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் மகளிர் மாநாடு 2026, கட்சியின் பொதுச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான கலீலுர் ரஹ்மான் அவர்களின் தலைமையில் வெற்றிகரமாக (2026/8/23) நடைபெற்றது.

இந்த சிறப்புமிக்க நிகழ்வில் விசேட அழைப்பாளர்களாகக் கலந்துகொண்ட சட்டத்தரணி இர்ஃபானா இம்ரான் அவர்களும் கலாநிதி சந்திமா விஜேகுணவர்தன அவர்களும் பெண்களின் உரிமைகள், சமூகப் பொறுப்புகள் மற்றும் தலைமைத்துவம் தொடர்பாக பெறுமதியான கருத்துக்களையும் உரைகளையும் வழங்கினர்.

பெண்களின் தலைமைத்துவம், வலுவூட்டல் மற்றும் சமூகப் பங்களிப்பை மேலும் வலுப்படுத்தி, அமைதியானதும் நீதியானதுமான இலங்கையை கட்டியெழுப்புவதற்காக ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் மகளிர் சக்தியை முன்னோக்கிக் கொண்டு செல்வோம் என்றும் இதன் போது கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான கலீலுர் ரஹ்மான் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *