Thursday, July 30, 2026
Latest:
உள்நாடு

ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (30) மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும்.

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், இரத்தினபுரி, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும்.

காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன், காற்றின் வேகமானது மணிக்கு 30-40 கிலோமீற்றராகக் காணப்படும்.

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான மற்றும் கற்பிட்டியிலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடும்.

முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை வரையான மற்றும் கற்பிட்டியிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *