Wednesday, July 29, 2026
Latest:
உள்நாடு

சம்மாந்துறை வலயத்திலிருந்து அல்-அமீர் வித்தியாலயம் மாத்திரம் தெரிவு

இன்று (29) புதன்கிழமை முதல் எதிர்வரும் ஆகஸ்ட் 02ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள மாகாணங்களுக்கிடையிலான இளைஞர் பரிமாற்றத்திட்டம் – 2026 முகாமில் பங்குபற்ற சம்மாந்துறை வலயத்திலிருந்து அல்-அமீர் வித்தியாலயத்தின் மாணவர் படைப் பிரிவினர் மாத்திரம் தெரிவு செய்யப்பட்டுள்ளமை இப்பாடசாலைக்கு மற்றுமொரு மகுடமாகும்.

திருகோணமலையில் இன்று ஆரம்பமாகியுள்ள மாகாணங்களுக்கிடையிலான இளைஞர் பரிமாற்றத் திட்டம் – 2026 முகாமில் பங்குபற்ற அல்-அமீர் வித்தியாலயத்தின் மாணவர் படைப்பிரிவினர் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இம்மாணவர்களுக்கு தொடர்ந்தேர்ச்சியாக உற்சாகமளித்து இவர்கள் பல சாதனைகளை நிலைநாட்டக் காரணமாக இருந்து வருபவர் இப்பாடசாலையின் அதிபர் திருமதி எம்.எச்.நூறுல் ஹிமாயா அவர்களாகும்.

மேலும் இம்முகாமில் பங்குபற்ற எமது பாடசாலையைத் தெரிவு செய்த தேசிய மாணவ வீரர் படை அணியின் 17ஆம் படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி லெப்டினன் கேர்ணல் அருண ஷாந்த மற்றும் பயிற்சிக்கு பொறுப்பான அதிகாரி கெப்டன் ஸ்டாலின், மற்றும் மேஜர் நாசிர் ஆகியோருக்கும் இம் மாணவர்கள் இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி வழங்கிய வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் அவர்களுக்கும் மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி ஏ.சீ.நுஸ்றத் நிலோஃபறா அவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி இரண்டாம் லெப்டினன் எம்.எஸ்.எம்.ஃபஷ்றி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *