தென்கிழக்கு பல்கலைக்கழக பொதுப் பட்டமளிப்பு விழா – 9 அமர்வுகளில் 3398 மாணவர்களுக்கு பட்டங்கள்; நாளை இறுதி அமர்வு
ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 18 ஆவது பொது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை 25ஆம் திகதி தொடக்கம் திங்கட்கிழமை வரை பல்கலைக்கழக வளாக மண்டபத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
9அமர்வுகளாக கொண்ட இப்பட்டமளிப்பு விழாவில் 3398 மாணவர்கள் பட்டங்களை பெற உள்ளதாக பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் எம்.ஐ. நெளபர் தெரிவித்தார்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீனின் பங்குபற்றுதலுடன் வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி பாயிஸ் முஸ்தபா தலைமையில் இடம் பெறவுள்ள இந் நிகழ்வில், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும், மத்திய மாகாண அளுநருமான பேராசிரியர் சரத் அபயகோன் பட்டமளிப்பு விழாவின் தொடக்க உரையினை நிகழ்த்தினார்.
சனிக்கிழமை முதலாவது அமர்வில் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த 187 பட்டதாரிகளுக்கும், தொழில்நுட்ப பீடத்தைச்சேர்ந்த 285 பட்டதாரிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன.
இரண்டாவது அமர்வில் இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தைச் சேர்ந்த 368 பட்டதாரிகளுக்கும் மூன்றாவது அமர்வில் இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தைச் சேர்ந்த 414 பட்டதாரிகளும் பட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
ஞாயிற்றுக்கிழமை நான்காவது அமர்வில் பிரயோக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த 418 பட்டதாரிகளும் ஐந்தாவது அமர்வில் கலை, கலாசார பீடத்தைச் சேர்ந்த 343 பட்டதாரிகளும் பட்டங்களை பெறவுள்ளனர்.திங்கட்கிழமை ஏழாவது அமர்வில் வர்த்தக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த 272 பட்டதாரிகளும், 8வது அமர்வில் வர்த்தக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த 474 பட்டதாரிகளுக்கும் 9ஆவது அமர்வில் 264 வெளிவாரி பட்டதாரிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.








றிபாஸ்
