குர்ஆன் அகடமியினால் புத்தளம் பெரிய பள்ளிவாசலில் வளர்ந்தோருக்கான கிராஅத் பயிற்சி நெறிகள்
புத்தளம் பெரியபள்ளிவாசலில் வளர்ந்தோருக்கான குர்ஆன் அகடமி ஊடாக நடத்தப்படும், வளர்ந்தவர்களுக்கான கிராஅத் பயிற்சி நெறி வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது.
வயது 28 முதல் 69 வரையான ஓய்வு நிலை அரச ஊழியர்கள், கடை சிப்பந்திகள், சுய தொழிலாளர்கள், தொழிலாளிகள் என வித்தியசமான தொழில் துறைகளைச் சேர்ந்த வாலிபர்களும் வளர்ந்தவர்களும் புனித குர்ஆனை ‘தர்தீல்’ அச்சரம், ஓசை, ஒழுங்கு, அமைப்பு பிசகாமல் ஓதும் பயிற்சி வகுப்பில் தொடராகக் கலந்துகொண்டு புனித குர்ஆனை தஜ்வீத் முறைப்படி இனிமையாக ஓதும் பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.
இலங்கையின் பிரபல காரி அல்முஜாஸ் அல்ஹாபிழ் எம். ஹக்கீம், முஹம்மத் இர்பான் காரி ஆகியோர் இப்பயிற்சி நெறியை வடிவமைத்து பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றுகின்றார்கள்.
கடந்த 2026.04.22இல் ஆரம்பிக்கப்பட்ட இக் கிராஅத் பயிற்சி நெறி, புதன்கிழமைகளில் இஷா தொழுகையின் பின்னர் தொடராக நடைபெறுகின்றது.
இப்பயிற்சி நெறியில் இணைந்து புனித குர்ஆனை தர்தீலாக ஓதுவதற்கு விரும்பும் வாலிபர்கள்; வளர்ந்தவர்கள் புத்தளம் பெரியபள்ளிவாசல் அலுவலகத்தில் விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




எம்.யூ.எம்.சனூன்
