அகில இலங்கை உதைபந்தாட்டபோட்டியில் கிண்ணியா அல் அமீன் மகா வித்தியாலய அணி சம்பியன்
இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட அகில இலங்கை உதைபந்தாட்ட 20 வயதின் கீழ் டிவிசன் 2 போட்டியில் கிண்ணியா அல் அமீன் மகா வித்தியாலய அணி சம்பியனாகத் தெரிவாகியது.
கொழும்பு சென்ட் பீட்டர்ஸ் கல்லூரி மைதானத்தில் (12) இடம்பெற்ற இறுதிப் போட்டியில் கிண்ணியா அல் அமீன் மகா வித்தியாலயம் மற்றும் கொழும்பு டி மெசனட் கல்லூரி ஆகிய அணிகள் பங்குபற்றியிருந்தன.
இப்போட்டியில் கொழும்பு டி மெசனட் கல்லூரி அணியை தோல்வியுறச் செய்து 2_1என்ற கோல் கணக்கில் அல் அமீன் மகா வித்தியாலய அணி வெற்றியை தனதாக்கி சம்பியனாக தெரிவு செய்யப் பட்டது.
இப்போட்டியில் சிறந்த வீரராக எம். மனாஸ் மற்றும் சிறந்த கோல் காப்பாளராக ஏ.எம்.அபாஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

(எம்.ஏ.முகமட்)
