லக்ஸ்டோ மீடியா நெட்வேர்க் ஸ்ரீலங்காவின் முப்பெரும் விழா – 2026
லக்ஸ்டோ மீடியா நெட்வேர்க் ஸ்ரீலங்காவின்
30ஆவது வருட பேராளர் மாநாடு மற்றும் நேசம் பத்திரிகை வெளியீடு மற்றும் திறமைக்கான தேடல் விருது விழா எனும் முப்பெரும் விழா நாளை 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 03.00 மணிக்கு சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளது.
லக்ஸ்டோ மீடியா நெட்வேர்க், இலங்கை தமிழ் எழுத்தாளர்கள் சங்கம், மூதூர் ஜே.எம்.ஐ., உலகவலம், நேசம் டிவி ஆகியவற்றின் ஊடக அனுசரணையில், லக்ஸ்டோ மீடியா நெட்வேர்க், நேசம் டிவி & உலக வலம் ஆகியவற்றின் தலைவரும் முன்னாள் கல்முனை மாநகரசபை உறுப்பினரும் சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளருமான கலாநிதி ஏ.எல்.அன்ஸார் (JP) தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில், முன்னாள் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கே.காதர் மஸ்தான் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
இந் நிகழ்வில், ஓய்வுபெற்ற கோட்டக் கல்வி பணிப்பாளரும் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபருமான தமிழ் மருதமாமணி கலாபூஷணம் ஏ.பீர் முகம்மது, சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் முன்னாள் தலைவரும் நேசம் டிவியின் பொறுப்பதிகாரியுமான ஹிபத்துல் கரீம் ஆகியோர் முன்னிலை அதிதிகளாகவும் சாய்ந்தமருது பிரதேச செயலக சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் ரஸ்மி மூஷா, கவிஞர் ஒலிபரப்பாளர், பேராசிரியர் ஏ.சி.றாஹில் ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வில் முதற்பிரதியை கலைஞர் முனைமருதவன் எம்.எச்.எம் இப்ராஹிம் பெற்றுக் கொள்கிறார்.
நேசம் சஞ்சிகை மூதூர் ஜே.எம்.ஐ. இஹ்ஸான் திறன் நோக்கு அதிதியாக கலந்து கொள்கிறார்.
இலங்கை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் முபாறக் அப்துல்மஜீத், சம்மாந்துறை ஈஸ்டன் ஜூவலரியின் உரிமையாளர் தொழிலதிபர் கலாநிதி இஸட். ஏ. பஷீர், தொழிலதிபர் சஹில், தொழிலதிபர் ஜெமில், மொரிச் நிறுவனப்பணிப்பாளர் நளிம், இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளரும் லக்ஸ்டோ மீடியா நெட்வேர்க்கின் பெண்கள் பிரிவுத் தலைவி முஹம்மட் றாசிக் பாத்திமா றஸ்மியா, ரெட்செலி உரிமையாளர்
எம்.எம்.ஏ ஆஷாத் றஹிம், சிலோன் மீடியா போரத்தின் தலைவர் ஊடகவியலாளர் கலாநிதி றியாத் ஏ.மஜீத், சிரேஷ்ட ஊடகவியலாளர் அஸ்லம்.எஸ். மௌலானா ஆகியோர் நிகழ்வில் பிரதிபெறும் கௌரவ அதிதிகளாகக் கலந்து சிறப்பிக்கின்றனர்.
மேலும் விஷேட பிரதியினை மனித நேயன்
இர்ஷாத் ஏ.காதர் நற்பணி மன்றம் பெறவுள்ளது.
இந்நிகழ்வில் தேசிய சமாதான நீதிபதிகள் சபையினுடைய சமாதான நீதிவான்கள் உட்பட எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், கல்விமான்கள், ஊர்நலன்விரும்பிகள், அமைப்பின் அங்கத்தவர்கள், கவிஞர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
லக்ஸ்டோ மீடியாவின் 30 ஆவது ஆண்டைச் சிறப்பிக்கும் வகையில் அன்றைய தினம் சமாதான நீதிபதிகள் மற்றும் லக்ஸ்டோ மீடியா உறுப்பினர்கள் எல்லோருக்குமான சட்டம், ஊடகம் மற்றும் தலைமைத்துவம் சம்பந்தமாக செயலமர்வு கலாசார மத்திய நிலையத்தில் காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை இடம்பெறுவதோடு, அன்றைய தினம் மாலை 3.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரை இடம்பெறும் கலை, கலாசார இம் மாபெரும் முப்பெரும் விழாவில் நாட்டின் பல பாகங்களிலும் தெரிவு செய்யப்பட்ட 100 பேருக்கு ‘திறமைக்கான தேடல் Talent awards’ விருது வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளதுடன் லக்ஸ்டோ மீடியா கடந்த ரமழானை முன்னிட்டு நடாத்திய இஸ்லாமிய கேள்வி – பதில் போட்டியில் பங்குபற்றியவர்களுக்கான பரிசு வழங்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
