உள்நாடு

பிரதமர் ஹரிணி, றிஷாத் பதியுதீன் கட்டார் பயணம்

கட்டாரின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் மறைவிற்கு இலங்கை அரசாங்கத்தினதும், மக்களினதும் ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதற்காக உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (14) செவ்வாய்க்கிழமை மாலை டோஹா நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

பிரதமருடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீனும் கட்டார் பயணமாகியுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, பிரதமர் தலைமையிலான தூதுக்குழுவினர் இலங்கையின் இரங்கலைத் தெரிவிப்பதற்கும் இரு நாடுகளுக்கும் இடையே நிலவிவரும் நீண்ட கால நட்புறவையும் ஒத்துழைப்பையும் மீள உறுதிப்படுத்துவதற்கும் கட்டார் இராச்சியத்தின் உயர்மட்டத் தலைவர்களுடன் உத்தியோகபூர்வ சந்திப்புகளில் ஈடுபடவுள்ளனர்.

இந்த விஜயமானது இலங்கைக்கும் கட்டாருக்கும் இடையில் நிலவும் நெருக்கமான, சினேகபூர்வ உறவினைப் பிரதிபலிப்பதுடன், கட்டார் இராச்சியத்துடனான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *