விமான நிலையங்கள் மற்றும் ஓடுபாதைகளுக்கு அருகில் பட்டம் விடுவதைத் தவிர்க்கவும்: விமானப் பாதுகாப்பிற்காக பொதுமக்களுக்கு அவசர வேண்டுகோள்
தற்போது நடைபெற்று வரும் பட்டம் காலம் என்பதால், நாட்டில் உள்ள ஓடுபாதைகள் மற்றும் விமான நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பட்டம் விடுவது தற்போது அதிகரித்துள்ளது.
இது விமானங்களின் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. ஓடுபாதைகளுக்கு அருகில் பட்டம் விடுவது உலகளவில் விமான விபத்துகளுக்கு ஒரு முக்கிய காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளது, மேலும் இது விமான செயற்பாடுகளை நேரடி தடையாக அமைகிறது .
இலங்கையின் கட்டுநாயக்க, ரத்மலான, ஹிங்குரகொட, சீனக்குடா, அனுராதபுரம், பாலலி, கட்டுக்குருந்த, கொக்கல, வவுனியா, வீரவில, மட்டக்களப்பு மற்றும் மத்தள ஆகிய இடங்களில் உள்ள ஓடுபாதைகளைச் சுற்றி இத்தகைய பரவலான பட்டம் விடுதல் தற்போது அதிக அபாயகரமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
இந்த அபாயகரமான சூழ்நிலையை உறுதிப்படுத்தும் விதமாக, இன்று (15) பயிற்சிக்காக ரத்மலான விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட Y-12 ரக விமானம் ஒன்று, காத்தாடி விடப்பட்ட நூலில் சிக்கியதில் கடுமையான ஆபத்தை எதிர்கொண்டது. பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்த விமானம், மீண்டும் ரத்மலான விமான நிலையத்திற்கே மீண்டும் தரையிறங்கியுள்ளது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப ஆய்வில், விமானத்தின் இடது சக்கரம், இடது எஞ்சின் பகுதி மற்றும் பல பாகங்களில் காத்தாடி நூல்கள் கடுமையாகச் சிக்கியிருந்தது தெரியவந்தது.
காத்தாடி நூல்களோ அல்லது அதன் பாகங்களோ எஞ்சினுக்குள் அல்லது அதன் இயக்க முறைமைக்குள் நுழைந்தால், விமானம் முழுவதற்கும் கடுமையான சேதம் ஏற்படடக்கூடிய நேரடி அபாயம் உள்ளது. இதனால் பெரும் உயிர் மற்றும் உடைமை இழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
எனவே, விமானப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பயணிகளின் உயிர்களைப் பாதுகாப்பதற்கும், ஓடுபாதைகள் மற்றும் விமான நிலையங்களுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள், அத்தகைய பகுதிகளில் காத்தாடி விடுவதை முற்றிலுமாகத் தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




ஏ.எஸ்.எம்.ஜாவித்
