குறிஞ்சிப்பிட்டி சந்தியில் இரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி ஒருவர் பலி இருவர் காயம்
கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டி சந்திக்கு அருகில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து இருவருக்கு பலத்த காயம் ஒருவர் சிறு காயங்களுடன் கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூவரும் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு அனுப்பட்டனர்.எனினும் சிகிச்சை பலனின்றி 59 வயது குடும்பஸ்தர் நள்ளிரவு உயிரிழப்பு
இவ் விபத்து சனிக்கிழமை (27) இரவு இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்து பற்றி தெரியவருவதாவது:
கற்பிட்டியைச் சேர்ந்த 59 வயது குடும்பஸ்தர் குறிஞ்சிப்பிட்டி உள் வீதியில் இருந்து கற்பிட்டியின் பிரதான வீதிக்கு மோட்டர் சைக்கிள் வந்ததாகவும் அதே நேரம் கற்பிட்டியிலிருந்து குறிஞ்சிப்பிட்யை நோக்கி 21 வயதை ஒத்த இரு இளைஞர்கள் வேகமாக மோட்டார் சைக்கிள் சென்றதன் காரணமாக இளைஞர்களால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது .
இதில் இரு மோட்டார் சைக்கிள்களும் பலத்த சேதத்துக்குள்ளாகியுள்ளதுடன் இரு மோட்டார் சைக்கிள்களையும் செலுத்தியவர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் பின்னுகக்கு அமர்ந்து வந்த இளைஞர் தூக்கி வீசப்பட்டதில் சிறு காயங்களுக்குள்ளாகி நிலையில் கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம்ஸ தள வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட நிலையில் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு உயிரிழந்துள்ளார்.
இவ் விபத்து பற்றிய மேலதிக விசாரணைகளை கற்பிட்டி போக்குவரத்து பிரிவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
