கிண்ணியா சாதின் சஹீட்ஐபர் கிண்ண உதைபந்தாட்ட போட்டிக்கு போர்த்துக்கல் பயணம்
திருகோணமலை கிண்ணியாவைச் சேர்ந்த கே.சாதின் சஹீட் ஐபர் கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப் போட்டிக்காக போர்த்துக்கல் நாட்டுக்கு (27) பயணமானார்.
கொழும்பு மெய்வல்லுனர் உதைபந்தாட்ட அகடமியின் சார்பில் இம்மாதம் ஜூன் 29 முதல் ஜூலை 5வரை போர்த்துக்கல்லில் நடைபெறவுள்ள சுற்றுப் போட்டியில் இவர் கலந்து கொள்கிறார்.
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தேசிய கனிஷ்ட அணியில் பங்கு கொண்ட இவர்,
16 வயதின் கீழ் 2024ஆம் ஆண்டு பூட்டானில் இடம் பெற்ற சார்ப் சம்பியன்ஷிப் கால்பந்தாட்டப் போட்டியிலும், இதே ஆண்டு லங்கா புக் கால்பந்தாட்டக் கிண்ணத்துக்கான இலங்கை கால்பந்தாட்ட அணி சார்பாக மலேசிய நாட்டில் பங்குகொண்டு சிறந்த கோல் காப்பாளராகத் தெரிவுசெய்யப்பட்டார். 2025ஆம் ஆண்டு கொழும்பில் இடம்பெற்ற சார்ப் சம்பியன்ஷிப் போட்டியிலும் கோல் காப்பாளராகவும், கடந்த 2025ஆம் ஆண்டு ஆசிய கிண்ண தகுதிகாண் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி சீனாவில் இடம் போட்டியிலும் கோல் காப்பாளராகவும் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே ஒரு உதைபந்தாட்ட வீரராக இவர் கலந்து கொள்கின்றமை குறிப்பிடத் தக்கது.

(எம்.ஏ.முகமட்)
