உள்நாடு

புத்தளம் தில்லையடியில் வேன் விபத்து; மயிரிழையில் உயிர் தப்பிய 10 பேர்

புத்தளம் தில்லையாடியில் கட்டுபாட்டை இழந்த வேன் ஒன்று முச்சக்கர வண்டியை மோதிக் கொண்டு அருகில் இருந்த இருமாடி கட்டிடத்தின் தூணில் மோதியதுடன் வேன் மற்றும் முச்சக்கர வண்டிகளில் பயணித்த பத்து நபர்கள் உயிரிழப்பு எதுவும் இன்றி மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் புதன்கிழமை (24) இடம்பெற்றுள்ளது

அநுராதபுரத்திலிருந்து நீர்கொழும்பிற்க்கு பயணம் செய்த மேற்படி வேன் புத்தளம் தில்லையாடியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டியை மோதிக் கொண்டு அருகில் இருந்த இருமாடி கட்டிடத்தின் தூணில் மோதிய நிலையில் நின்றுள்ளது

இவ் விபத்து சம்பவத்தில் வேன் மற்றும் முச்சக்கர வண்டிகளில் பயணித்த பத்து நபர்கள் எவ்வித உயிர் ஆபத்துக்கள் இன்றி மயிரிழையில் உயிர் தப்பிய நிலையில் இதில் ஐவர் சிறு காயங்களுடன் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ் விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *