கலாசார பேரவைக்கான புதிய நிர்வாகம் தெரிவானது
கலாசார அதிகார சபையின் வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த (16) செவ்வாய்க்கிழமை அன்று சம்மாந்துறை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பிரதேச செயலாளர் தேசபந்து ஜனாப் எஸ். எல். எம். ஹனீபா அவர்கள் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது. அதன்படி,
நிருவாக பதவிகள்
நிருவாக தலைவர்- பிரதேச செயலாளர் தேசபந்து ஜனாப் எஸ். எல். எம். ஹனீபா
தலைவர் – டாக்டர் எம்.எம். நவ்சாத்
உப தலைவி – சித்தி றபிக்கா பாயிஸ்
செயலாளர் – எம். இஸ்ஹாக்
உப செயலாளர் – ஏ. ஜி. எம். இக்ராம்
பொருளாளர் – டாக்டர் எம். சி. எம். காலித்
செயற்பாட்டுக் குழு உறுப்பினர்கள்
பரிதா இஸ்மாயில்
எம்.எச்.அலியார்
எஸ். ஜெஸ்மின்
எம். சி. நௌசா
எம். பி அஹமட் ஜின்னா
கணக்காய்வாளர்
சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் கணக்காளராக கடமையாற்றும் எஸ்.எல்.சர்தார் மிர்சா அவர்கள் கலாசார அதிகார சபையின் கணக்காய்வாளராக தெரிவு செய்யப்பட்டார்.
ஒருங்கிணைப்பாளர்கள்
சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் கலாசார உத்தியோகத்தர்களாக கடமையாற்றும்:
ஏ. எல். பரினா
வீ. தயாஜினி
ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.
அத்துடன், பதவிவழி நிருவாக குழு உறுப்பினராக நிருவாக கிராம உத்தியோகத்தர் எம் எஸ் எம் நளீர் தெரிவு செய்யப்பட்டார்
மேலும், கலாசார பேரவையின் உப தலைவராக எழுத்தாளர் ஜெலில் ஜீ அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.
இறுதியாக, புதிய நிர்வாகத்தினருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டதுடன், கலாசார அபிவிருத்தி மற்றும் சமூக ஒற்றுமையை மேம்படுத்தும் வகையிலான எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. கூட்டம் நன்றியுரையுடன் நிறைவுற்றது.




