17 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய மட்டத்திற்குத் தெரிவான அஸ்ஸிராஜ் பாடசாலை மாணவி
நடந்து முடிந்த மாகாண மட்ட தரம் 12 மற்றும் 13 மாணவர்களுக்கான கவிதை ஆக்கம் போட்டியில் சாளம்பைக்கேணி அஸ்ஸிராஜ் பாடசாலையைச் சேர்ந்த மாணவி எச்.எப். ஹிஜா முதலாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளார்.
17 ஆண்டுகளுக்குப் பிறகு அஸ்ஸிராஜ் பாடசாலைக்கு இப்பெரும் சாதனையைப் பெற்றுத்தந்த மாணவி எச்.எப்.ஹிஜாவின் வெற்றி, பாடசாலை சமூகத்தினரிடையே மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது.
இம்மாணவியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் பயிற்சியளித்த ஆசிரியர்களான பி.சட்குனராசா, வி.தயாநிதி, கே.நவகுமார் மற்றும் ஏ.எம்.பௌசுனா ஆகியோர் பாராட்டுக்குரியவர்களாகத் திகழ்கின்றனர்.
மேலும், இச்சாதனைக்குப் பின்னணியாக இருந்து வழிகாட்டிய பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர், பகுதி தலைவர்கள் மற்றும் தரம் 1 முதல் மாணவிக்கு கல்வி கற்பித்த அனைத்து ஆசிரியர்களின் பங்களிப்பும், குறிப்பாக பெற்றோரின் அர்பணிப்பும் பாராட்டத்தக்கதாகும்.
தேசிய மட்டப் போட்டியிலும் மாணவி சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் மேலும் பெருமை சேர்ப்பார் என அனைவரும் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(ஏ.எச்.எம்.ஹாரீஸ்- மத்திய முகாம் செய்தியாளர்)
