உள்நாடு

புத்தளம் நகரில் வெள்ள அனர்த்த நிலைமைகளை குறைப்பதற்கான நீரியல் மற்றும் மழைநீர் வடிகால் தொடர்பாக ஆய்வு

புத்தளம் நகர மக்கள் நீண்ட காலமாக எதிர்கொள்ளும் வெள்ள அனர்த்த நிலைமைகளுக்கு முறையான மற்றும் நிலைபேறான தீர்வுகளை வழங்கும் நோக்கில், இலங்கை நில அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் மூலம் நீரியல் மற்றும் மழைநீர் வடிகால் ஆய்வு ஒன்றை மேற்கொள்வதற்கான தேவையான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த வேலைத்திட்டம் புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் வழிகாட்டுதலின் கீழ் புத்தளம் மாவட்ட செயலகத்தினால் ஒருங்கிணைக்கப்படுகிறது.

அதன்படி, தொடர்புடைய ஆய்வு தொடர்பான கலந்துரையாடலும் கள ஆய்வும் புதன்கிழமை (27) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம். பைசல், புத்தளம் மாநகர சபையின் முதல்வர் பொறியியலாளர் ரின்சாட் அஹமட் உட்பட மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

அதேபோல், புத்தளம் மாவட்ட செயலாளர் இந்திக சில்வா உட்பட புத்தளம் மாவட்ட செயலகம், புத்தளம் மாநகர சபை, புத்தளம் பிரதேச செயலகம், நீர்பாசன திணைக்களம், வடமேல் மாகாண நீர்பாசன திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகாரசபை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கை புகையிரத திணைக்களம் மற்றும் இலங்கை நில அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் ஆகிய நிறுவனங்களை பிரதிநித்துவப்படுத்திய அதிகாரிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *