இந்த ஆண்டு ஹஜ் கடமைக்காக 165 நாடுகளிலிருந்து 17 இலட்சம் ஹாஜிகள்; 8,93,396 ஆண்கள், 8,13,905 பெண்கள்
ஹிஜ்ரி 1447 ஆம் ஆண்டில் அதாவது இவ்வருடம் ஆண்கள், பெண்கள் என சுமார் 1,707,301 ஹாஜிகள் சுமார் 165 நாடுகளில் இருந்து புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற சவுதி அரேபியாவின் மக்கா நகருக்கு வருகை தந்துள்ளதாக அறபு செய்திச் சேவை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேற்படி தொகையில் 160,646 ஹாஜிகள் உள்நாட்டு ஹாஜிகள் எனவும் 1,546,655 ஹாஜிகள் சவுதி அரேபியாவுக்கு வெளியில் இருந்து அதாவது வெளிநாடுகளில் இருந்து வருகை வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்களில் 1,485,729 ஹாஜிகள் விமானங்கள் மூலமாகவும் 54,429 ஹாஜிகள் தரை வழியாகவும் 6,497 ஹாஜிகள் கப்பல்கள் மூலம் கடல் வழியாகவும் வந்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஹஜ் கடமைக்கு வருகை தந்த மொத்த 1,707,301 ஹாஜிகளில் 893,396 பேர் ஆண்கள் எனவும் 813,905 பேர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாஜிகளின் பாதுகாப்பு மற்றும் ஏனைய நலன்கள் கருதி சவுதி அரசு 441,049 பேரடங்கிய பாதுகாப்பு தரப்பினரையும் நலன் புரி பணிகளுக்காக 26,701 பேரை கொண்டவராகவும் இணைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
